தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து "லவ் டுடே " எனும் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் இந்த ஆண்டு வெளியாகிய "டிராகன் " படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். குறுகிய கால இடைவெளியில் பான் இந்திய ஸ்டாராக வளர்ந்திருக்கும் இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் "lik " மற்றும் "dude" படத்தில் நடித்து வருகின்றார்.
இப் படத்தினை கேதீஸ்வரன் இயக்கி வருவதுடன் மைத்ரி மூவி மேக்கேர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. மேலும் இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது "dude " படம் அக்டோபர் மாதம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ் ,தெலுங்கு ,கன்னடா மொழிகளில் வெளியாகவுள்ளது. இதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே தேஜ் எனும் நடிகரின் படம் "dude " எனும் பெயரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே அங்கு படத்தின் பெயரை வைப்பதில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!