• May 14 2025

ஜெயம் ரவி தான் என்னைக் காப்பாற்றினார்..! பாடகி கெனிஷா வாயிலாக வெளியான உண்மை..!

subiththira / 6 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சி உலகத்தில் பிரபலமானவர் ரவி மோகன் , பல தொடர்கள், படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடம் நம்பிக்கையான நடிகராக இடம்பிடித்துள்ளார். சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரிய செய்தி ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்தது.

இந்நிலையில், அந்த விவகாரத்தை மிஞ்சும் அளவிற்கு தற்போது மற்றொரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் சமீபத்தில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமண விழாவில் கலந்துகொண்டது தான் அந்த பரபரப்புக்குக் காரணமாகியுள்ளது.


ரவி மோகன் – ஆர்த்தி தம்பதியினர் இடையே காணப்பட்ட விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இருவருக்கும் குழந்தைகள் உள்ள நிலையில், இந்த விவாகரத்தைச் சுற்றிய கருத்துக்கள் நீடித்து வருகின்றன.

அந்த வழக்கில் தீர்ப்பு எதுவும் வழங்கப்படாத நிலையில், சமீபத்தில் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் திருமண விழாவில் ஒன்றாக தோன்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக் கொண்டமை இணையத்தில் வைரலாகியுள்ளது. 


இந்த வீடியோவை தொடர்ந்து, ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் மற்றும் தன் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களை குறித்து உணர்வு பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்தவகையில் தற்பொழுது எழுந்த பிரச்சனை குறித்து கெனிஷா கூறியதாவது, “எனக்கு ஜெயம் ரவி மிகவும் பிடிக்கும். நான் அவருடைய பெரிய ரசிகை. ஒரு நிகழ்ச்சியில், ஜெயம் ரவி ஹெஸ்டாக வந்திருந்தார். அந்த மேடையில் நான் பாடப் போகிறேன் என்பதையே எனக்குத் தெரியவில்லை. பின் நான் மேடையில் பாடி முடித்த பிறகு யாருமே கை தட்டவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்போது ரவி தான் பக்கத்தில இருந்த எல்லாரையும் கை தட்ட வைத்தார். அவருடைய அந்த பேச்சு எனக்கு மிகுந்த தைரியம் அளித்தது.” என்று உணர்ச்சி பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement