• Dec 26 2024

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் இருந்து இன்னொரு விக்கெட்.. தாமுவும் விலகுகிறாரா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பானகுக் வைத்து கோமாளிஎன்ற நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் திடீரென யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த நிகழ்ச்சியின் குழுவினர் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருப்பது அடுத்த சீசன் இருக்குமா? கேள்விக்குறியை எழுப்பியது.

நான்கு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கடேஷ் பட் வெளியேறி பிள்ளையார் சுழி வைத்தார். அவரது வெளியேற்றத்துக்கு பின் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர்களும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்குமா? என்ற கேள்விக்குறி எழும்பிய நிலையில் தான் விஜய் டிவி நிர்வாகம் கண்டிப்பாக அடுத்த சீசன் உண்டு என்றும் நடுவர் தாமுவுடன் மாதம்பட்டி ரங்கராஜ் என்பவர் இணைந்து நடத்துவார் என்றும் இந்த நிகழ்ச்சியின் குக்குகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி தாமுவும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது. யார் எங்கே போனாலும் நான் விஜய் டிவியில் இருந்து போக மாட்டேன் என்று தாமு உறுதியாக இருந்த நிலையில் திடீரென அவர் தற்போது குழப்பத்தில் இருப்பதாகவும், அவரை வெளியில் இழுக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதாகவும் இதனால் அவர் மதில் மேல் பூனையாக விஜய் டிவியில் தொடரலாமா? அல்லது வேறு டிவிக்கு போகலாமா? என்ற குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது

ஒருவேளை தாமுவும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டால்குக் வித் கோமாளிநிகழ்ச்சியின் அடுத்த சீசன் மீண்டும் கேள்விக்குறியாகி விடும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement