• Dec 27 2024

கூகுளில் கூட கிடைக்காத புகைப்படம்.. ஒரே புகைப்படத்தில் தேவயானி - நீலிமா இசை..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகைகள் தேவயானி மாற்றம் நீலிமா இசை இணைந்து எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதளத்தில் இருவரும் பகிர்ந்து உள்ள நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூகுளில் கூட நீங்கள் இருவரும் சேர்ந்த புகைப்படத்தை தேடினேன் கிடைக்கவில்லை, ஆனால் இப்போது உங்கள் இன்ஸ்டாவில் கிடைத்துவிட்டது என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்தார்.

நடிகை தேவயானி கடந்த 2003 ஆம் ஆண்டு தான் முதல்முறையாக சீரியல் பக்கம் வந்தார் என்பதும் அவரது முதல் சீரியலான ’கோலங்கள்’ கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் மிகப்பெரிய அளவில் சன் டிவியில் பிரபலமானது என்பது தெரிந்தது. அவரது அபி கேரக்டரை இன்னும் கூட ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு அவர் ’மஞ்சள் மகிமை’ ’முத்தாரம்’ ’ராசாத்தி’ உள்ளிட்ட சில சீரியல்களில் தேவயானி நடித்தார்.

அதேபோல் நீலிமா ராணி கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் டிவி சீரியல் நடித்துக் கொண்டிருந்தாலும் தேவயானியின் ’கோலங்கள்’ சீரியலில் அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் சந்தித்த புகைப்படம் நீலிமா இசையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவயானி அவர்களை மீண்டும் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி என்றும் தற்போது இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கிறோம் என்றும் அவருடன் இணைந்து நடிப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீலிமா இசை  தெரிவித்துள்ளார். தேவயானி மற்றும் நீலிமா இசை இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கி வருகிறார் என்பதும் இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்திற்கு கூகுளில் கூட நீங்கள் இருவரும் சேர்ந்த புகைப்படத்தை தேடினேன் கிடைக்கவில்லை, ஆனால் இப்போது உங்கள் இன்ஸ்டாவில் கிடைத்துவிட்டது என்பது உட்பட பல கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement