கங்குவா திரைப்படத்தின் தோல்வியின் பின்னர் மிகவும் மனமுடைந்த நடிகர் சூர்யா தற்போது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் கார்த்திக் சுப்புராஜின் ரெட்ரோ மற்றும் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி "பொன்னியின் செல்வன்" படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் புகழ்பெற்றவர். இவர் "கட்டா குஸ்தி" மற்றும் "ஜகமே தந்திரம்" போன்ற படங்களில் விஷ்ணு விஷால் மற்றும் தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யா லட்சுமி சூர்யாவின் "வாடிவாசல்" படத்தில் ஜோடியாக இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.இப் பேச்சு வார்த்தைகளில் இவர் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் இவருக்கு இரண்டு கண்டிஷன்கள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதாவது இந்த படம் முடியும் வரை வேறு எந்த படங்களிலும் நடிப்பதற்கு ஒப்பந்தம் போட வேண்டாம் எனவும் இயக்குநர் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.
Listen News!