• Jan 19 2025

தனுஷ் உங்கள நிச்சயம் அழ வைப்பார்.! இட்லி கடை தொடர்பில் நித்யா மேனன் கொடுத்த அப்டேட்

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

ராயன் படத்தை தொடர்ந்து  இயக்குநராகவும் நடிகராகவும் காணப்படும் தனுஷ், இட்லி கடை மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய  படங்களில் ஈடுபட்டு வருகின்றார். மேலும் முதன் முறையாக தெலுங்கு  இயக்குநருடன் கூட்டணி வைத்து குபேரா படத்திலும் நடித்து வருகின்றார்.

இதில் இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தென்காசியில் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாம். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் அருண் விஜய், பிரகாஷ்ராஜ், நித்தியா மேனன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றார்கள்.

d_i_a

இந்த படம் எதிர்வரும் ஏப்ரல் பத்தாம் தேதி உலக அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படம் தொடர்பிலான போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளனர்.


இந்த நிலையில், இட்லி கடை படத்தில் நடித்துள்ள நித்யா மேனன் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் அளித்த பேட்டியில், இந்த படத்தில் தனுஷ் உங்களை அழ வைத்து  விடுவார். அவ்வளவுக்கு எமோஷன் ஆன படம் இது.

மேலும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் துரு துருவென இருக்கும். என்னை வைத்து தான் காமெடி பண்ணி இருப்பார்கள் என தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement