• Sep 17 2026

சூர்யா, அஜித்தை விட மோசமான நடிப்பு.. ரவியை குறிவைத்தாரா ஆர்த்தி? சந்தேகத்தை கிளப்பிய பதிவு

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான பிரிவு விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தியை திருமணம் செய்துகொண்ட ரவி மோகனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.


இதனிடையே, ஆர்த்தி தனக்கு ஜீவனாம்சமாக ரூ.40 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அந்த கோரிக்கையை ஏற்காமல் ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த சூழலில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. அதில், “சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லோரையும் விட என் வாழ்க்கையில் வந்த ஒருத்தன் நடிச்சானே... நடிப்பு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் டா” எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஆர்த்தி தனது பதிவில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை வைத்து அவர் ரவி மோகனைத் தான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவரது இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி, இருவருக்கிடையேயான விவகாரம் குறித்து மீண்டும் விவாதங்கள் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement