• Apr 30 2026

'கர' தனுஷுக்கு கை கொடுத்ததா.? ரசிகர்களிடையே பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்கள்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணியில் உருவான ‘கர’ திரைப்படம் இன்று (ஏப்ரல் 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களிடையே  பெரும்பாலும் நேர்மையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த படத்தில் இதுவரை பார்க்காத விதமாக தனுஷ் நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை என்றாலும், அதனுடன் குடும்ப உணர்வுகளும் சேர்த்து சொல்லப்பட்டிருப்பது படத்திற்கு தனி பலமாக பார்க்கப்படுகிறது.

சிலர் படத்தின் கதை புதிதாக இல்லையென குறிப்பிட்டாலும், நடிகர்களின் நடிப்பு மற்றும் திரைக்கதை முன்னேற்றம் காரணமாக படம் ரசிக்கத்தக்கதாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


குறிப்பாக முதல் 20 நிமிடங்கள் சற்று மெதுவாக நகர்ந்தாலும், அதற்கு பிறகு படம் வேகமெடுத்து கிளைமாக்ஸ் வரை ஈர்க்கிறது என்பதே பொதுவான கருத்து.

மேலும், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையும், படத்தின் நுணுக்கமான காட்சியமைப்பும் பாராட்டைப் பெற்றுள்ளது. கிராமப்புறங்களில் வங்கி கடன் சிக்கல்களை எதிர்கொள்ளும் மக்களின் நிலையை எடுத்துக்காட்டியிருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மொத்தத்தில், ‘கர’ திரைப்படம் திரில்லர், உணர்ச்சி, யதார்த்தம் ஆகியவை கலந்து உருவான படமாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisement

Advertisement