தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஜய் சமீப காலமாக அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு விவாதங்களால் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றார். குறிப்பாக, விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கவனத்தை பெற்றன. பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரே நிகழ்வில் ஒன்றாகக் காணப்பட்டதை தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து, விஜய் – சங்கீதா உறவு குறித்த விவாகரத்து மீண்டும் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் அல்லது அவரது குடும்பத்தினர் தரப்பில் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து இயக்குநர் அமீர் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தனது கருத்தில் அவர், “மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டி விட்டு மகளிர் தின விழா என்னும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் தவெக சார்பில் இன்று நிகழ்கிறது.” என கடுமையாக விமர்சித்துள்ளார். இயக்குநர் அமீரின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!