• Dec 27 2024

‘கங்குவா’ ரிலீஸ் ஆகும் முன் சூர்யாவை கேவலப்படுத்திருவாங்க போல.. நாயகியின் ஆபாச வீடியோ?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் நாயகி திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் ‘கங்குவா’ படம் ரிலீஸ் ஆகும் வரையிலாவது இந்த மாதிரியான வீடியோக்களை வெளியிடாமல் இருக்கலாம் என சூர்யா ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’ என்பதும் 300 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து பிரமாண்டமாக உருவாக்கப்படும் இந்த படத்தில் நாயகியாக திஷா பதானி என்ற பாலிவுட் நடிகை நடித்து வருகிறார் என்பதும் தெரிந்தது. 

இந்நிலையில் திஷா பதானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவருக்கு இருக்கும் 61 மில்லியன் ஃபாலோயர்கள் அதை வைரல் ஆக்கி வருகிறார்கள் என்பதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக உள்ளது. 

இந்நிலையில் திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உள்பட சில கிளாமரான காட்சிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் பாசிட்டிவ் கமெண்ட் பதிவு செய்து வந்தாலும், சூர்யா ரசிகர்கள் மட்டும் நெகட்டிவ் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 

கிட்டத்தட்ட ஆபாசமாக இருக்கும் இது போன்ற வீடியோவை ’கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் வரையிலாவது வெளியிடாமல் இருக்கலாம் என்றும் சூர்யாவின் பெயரை கெடுத்து விட வேண்டாம் என்றும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனாலும் திஷா பதானி   இது போன்ற புகைப்படங்களையும் வீடியோக்களையும் நிறுத்த மாட்டார் என்று தான் கூறப்பட்டு வருகிறது.




Advertisement

Advertisement