• Apr 26 2026

மனோஜை அள்ளிச் சென்ற போலீஸ்.. விஜயா சொன்ன வார்த்தை.? சிந்தாமணிக்கு செக் வைத்த மீனா

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியலாக சிறகடிக்க ஆசை திகழ்ந்து வருகிறது. 

இந்த சீரியல் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் இதற்கென அதிகப்படியான பார்வையாளர்கள் காணப்படுகின்றனர். இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பெரியவர்களும் இந்த சீரியலுக்கு பிரியமானவர்களாக காணப்படுகின்றனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதைக்களம் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியான சீரியல் ப்ரோமோவில், போலி கையெழுத்து போட்டதற்காக மனோஜ் மீது நிதியாளர் புகார் கொடுக்கிறார். இதனால் போலீசார் வந்து மனோஜை கைது செய்கின்றனர். இதை பார்த்த விஜயா அவர் எந்த தப்பும் செய்யவில்லை என கதறி அழுகிறார்.

தங்களுடைய வக்கீலை வைத்து மனோஜை ஜாமினில் எடுக்க முயற்சிக்கின்றனர். ஆனால் வக்கீல், வழக்கு இல்லாமல் வெளியே எடுக்க வேண்டும் என்றால் நிதியாளருடன் பேசுங்கள், அதுதான் ஒரே வழி என்று கூறுகிறார்.


அதன் பின்னர் மீனா சிந்தாமணி வீட்டிற்கு சென்று வழக்கை வாபஸ் வாங்குமாறு சொல்கிறார். மேலும் அப்படி செய்யவில்லை என்றால் உனக்கு எதிராக எல்லோரும் திரும்புவார்கள், உனக்கு எதிராக கொடுத்த புகார்கள் எல்லாம் இருக்கின்றன, இதை போலீஸில் கொடுத்தால் நீ சிறைக்குத்தான் போக வேண்டும் என்று மிரட்டுகிறார். இதனால் சிந்தாமணி கலங்குகிறார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ.

எனவே சிறையில் இருக்கும் மனோஜை மீட்டு எடுப்பதற்காக மீனா முயற்சிக்கிறார். இதில் அவர் வெற்றி பெறுவாரா, சிந்தாமணி வழக்கை வாபஸ் வாங்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement