• Apr 26 2026

ஒல்லிக்குச்சி உடம்புன்னு கிண்டல் பண்ணாங்க... பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை உடைத்த தனுஷ்!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக பொல்லாதவன் திரைப்படத்தை நினைவுகூர்ந்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான இந்த படம், தனுஷின் நடிப்புத்திறனை மட்டுமின்றி அவரது உடல் மாற்றத்தையும் வெளிப்படுத்திய படைப்பாக பார்க்கப்படுகிறது.


தனுஷ் ஆரம்ப காலங்களில் ஒல்லியான உடலமைப்புடன் இருந்ததற்காக பல விமர்சனங்களை சந்தித்தார். ஆனால், அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் “பொல்லாதவன்” படத்தில் அவர் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரை உலகமும் அவரை புதிய கோணத்தில் கவனிக்கத் தொடங்கியது.

இந்த படம் 2007 நவம்பர் 8ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கதைக்களம், நடிப்பு, இசை ஆகியவை ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. குறிப்பாக, ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைப் போராட்டத்தை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்திய விதம் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், அந்த காலத்தில் கிடைத்த கைதட்டல்களை மறக்க முடியாது என்றும், தனது உடலமைப்பிற்காக முதன்முறையாக பாராட்டுகளை பெற்றுத்தந்த படம் இதுவே என்றும் தனுஷ் நெகிழ்ச்சியுடன் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement