• Apr 26 2026

சிங்கக்குட்டிக்கு அம்மாச்சியான பார்வதி..! செம ஹேப்பியாக பகிர்ந்த குட் நியூஸ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டு இறுதி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட கம்ருதீன், ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அவருடன் சேர்த்து வி.ஜே. பார்வதிக்கும் ரெட் கார்டு வழங்கப்பட்டது.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது கம்ருதீனுக்கும் பார்வதிக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, பின்னர் அது காதலாக மாறியது. நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் தங்கள் உறவை தொடர்ந்து வருவதுடன், பொதுவிடங்களிலும் ஒன்றாகவே தோன்றுகின்றனர்.

பிக் பாஸ் 9 டைட்டிலை திவ்யா கணேஷ் வென்றாலும், பார்வதிக்கு கிடைக்க வேண்டிய வெற்றியை சதி செய்து தடுத்துவிட்டார்கள் என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


சமீபத்தில் பார்வதியின் பிறந்தநாளை முன்னிட்டு கம்ருதீன் சிறப்பு சர்பிரைஸ் பார்ட்டி ஏற்பாடு செய்தார். இதற்கான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

 

இந்நிலையில் பார்வதி தனது புதிய வீடியோவில், தன் செல்ல நாய்க்குட்டி இரண்டு குட்டிகளுக்கு தாயானதாக பகிர்ந்துள்ளார். மேலும் ஒரு குட்டிக்கு ‘லக்கி’ என பெயர் வைத்திருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் அவருடைய ஆண் நாய்க்குட்டியை பார்த்து, 'குடும்பத்துக்கு ரொம்ப பெரிய நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க..' என்று செல்லமாக கொஞ்சம் உள்ளார். 

தனது செல்லப் பிராணியின் கர்ப்பத்தை ஸ்கேன் பண்ணி பார்த்தபோது அதில் இரண்டு நாய்க்குட்டிகள் இருந்துள்ளன. ஆனாலும் இறுதியில் ஒரு நாய்க்குட்டி மட்டுமே உயிர் பிழைத்து பிறந்துள்ளது. இதனால் அந்த சிங்கக் குட்டிக்கு 'லக்கி' என பெயர் வைத்துள்ளார் பார்வதி.

Advertisement

Advertisement