• Dec 25 2024

சூர்யாவுடன் படு கவர்ச்சியில் வந்த திஷா பாட்னி.. மெய்மறந்து ரசித்த பேன்ஸ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

2015 ஆம் ஆண்டு வெளியான லோஃபர் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கால் பதித்தவர் தான்  திஷா பாட்னி. இவர் எம். எஸ் தோனி என்ற படத்தின் மூலம் பாலிவுட் உலகில் அறிமுகமாகி மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் படங்களில் மட்டும் இல்லாமல் முன்னணி நிறுவனங்களின் விளம்பரம், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த கல்கி 28 98 ஏடி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பார். இந்த படத்தில் கமலஹாசன், பிரபாஸ், அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

திஷா பாட்னி அடிக்கடி பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவார். சமீபத்தில் இவர் கடற்கரையில் பிகினி உடையில் துள்ளி விளையாடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாக காணப்பட்டது.


தற்போது சூர்யா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள கங்குவா  படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார். இந்த படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில், கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்றைய தினம் மும்பையில் நடைபெற்ற போது அதற்கு கிளாமராக வந்திருக்கும் திஷா பாட்னியின் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த போட்டோஸ்,

Advertisement

Advertisement