தென்னிந்திய சினிமாவில் தனக்கென அதிகளவான ரசிக பட்டாளங்களை கொண்டுள்ள நடிகர்களில் முதன்மை பெற்றவர் ரஜினி காந்த். இவர் தமிழ் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். தற்பொழுதும் கூலி என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த நிலையில், நடிகர் ரஜினி காந்த் ராஞ்சியிலுள்ள ஜார்க்கண்டி ஆச்சிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு மன அமைதியை தேடி சென்றதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன் போது அவர் கூறுகையில், இங்கு நான் வருவது 3வது தடவை. இங்கு இரண்டு நாட்கள் ஆச்சிரமத்தில் தங்கியிருந்து நிறைய நேரம் செலவழிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
தியானம் செய்து கொண்டிருப்பதால் நேரம் எப்படி போகின்றது என்றே எனக்கு தெரியவில்லை. தியானம் செய்ய தொடங்கிய பின்னர் என்னை பார்க்கின்ற எல்லோருமே உங்களை பார்க்கும் போது அப்படியே positive vibe ஆக உள்ளது என்று சொல்லுகின்றார்கள்.
அத்துடன் தியானம் பண்ண தொடங்கியதில் இருந்து எனக்குள்ளே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது. ஆரம்பத்தில் எனக்கும் எந்தவிதமான மாற்றமும் தெரியவில்லை. ஆனால் சுமார் 10 வருடங்கள் கழித்த பின்னர் தான் எனக்குள்ளேயே பல மாற்றங்களை நான் உணர்ந்தேன் என்றார்.
மேலும் நாங்கள் கஷ்டப்படாமலே மன அமைதியை பெற்றுக்கொள்வதற்கும் தியானம் அவசியம். இதனை அனைவரும் செய்து கொண்டால் எல்லாம் சிறப்பாக நடக்கும். இதனால் அனைவரும் கண்டிப்பாக தியானம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Listen News!