தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ், தனது உதவிப் பணிகள் மூலம் மக்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டார். சமீபத்தில் விஷ்ணு என்ற சிறுவன் தனது கிராமத்திற்கு குடிநீர் வசதி தேவை எனக் கோரிக்கை வைத்ததை ஏற்று ரூபா 10 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை திறந்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் "நட்சத்திரமாவதை விட மனிதநேயத்துடன் இருப்பதே பெரிது!" என ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர். மேலும் விஷ்ணு என்ற சிறுவன் தனது கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறை மிக அதிகமாக உள்ளது என்பதைக் கவனித்ததுடன் இதனை மாற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.
இந்த குடிநீர் திட்டம் மூலம் அந்த ஊரிலுள்ள ஏராளமான குடும்பங்கள் தூய்மையான குடிநீரை பெறுவதற்கு உதவியாக உள்ளது. கிராம மக்கள் அனைவரும் இதனால் கண்ணீர் மல்க ராகவா லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்தச் செயலைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
Listen News!