• Mar 09 2025

வதந்திகளைப் பரப்பாதீர்கள்...! ரசிகர்களுக்கு பாடகி கல்பனா கொடுத்த விளக்கம்!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல பாடகியும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கல்பனா, சமீபத்தில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவின. இதற்கிடையில், "கல்பனா விபரீத முடிவு எடுத்தாரா?" என்ற கேள்விகளும் எழுந்ததுள்ளன.

இந்த வதந்திகளை முறியடித்து தான் தூக்கமின்மையால் மட்டுமே மருத்துவ உதவி தேடியதாகவும் எந்த தவறான முடிவும் எடுக்கவில்லை என அவரே நேரடியாக விளக்கம் அளித்துள்ளார். சமீப நாட்களாக, கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும், அதன் பின்னணி குறித்து உறுதியாக தெரியவில்லை என்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததுள்ளது.


அதை தொடர்ந்து, கல்பனா நேரடியாக இந்த தகவல்களை முழுமையாக மறுத்து உண்மை நிலையை தெளிவுபடுத்தியமை அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. அதில் அவர் கூறுகையில் "நான் தூக்கமின்மையால் மிகவும் சோர்வாக இருந்தேன். எனவே, சில தூக்க மாத்திரைகளை எடுத்தேனே தவிர எந்த விதமான தவறான முடிவும் எடுக்கவில்லை!" என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் "என் மீது தவறான தகவல்கள் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன் நான் நலமாக இருக்கிறேன் என்றார். அத்துடன் எனக்கு எந்தவிதமான உளவியல் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் என எதுவும் இல்லை தயவுசெய்து வதந்திகளை பரப்ப வேண்டாம்!" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement