• Dec 26 2024

லோகியின் பர்த்டே கேக்கில் என்ன எழுதியிருக்கு தெரியுமா? சர்ப்ரைஸ் விசிட் அடித்த குட்டி தளபதி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையுலகில் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவராக காணப்படுபவர் தான் லோகேஷ் கனகராஜ்.

கடந்த ஆண்டு இவர் இயக்கி வெளியிட்ட திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமான லோகேஷ், கடந்த 7 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டு விட்டார்.

தமிழ் திரையுலகின் டாப் இயக்குனர்களுள் ஒருவராக இருக்கும் லோகேஷ், தற்போது 38வது பிறந்த நாளை தனது நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார். இது தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


2017 ஆம் ஆண்டு மாநகரம் படத்தை இயக்கிய இவர், அதை அடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனராக மாறிவிட்டார்.

இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் LCU என எழுதப்பட்ட பர்த்டே கேக்கை வெட்டியுள்ளதோடு, அவரது நண்பர்களான அர்ஜுன் தாஸ் மற்றும் ரத்னகுமார் ஆகியோருடன் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

இது தவிர லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement