• Apr 19 2026

கேப்டன் விஜயகாந்தின் உடல் எங்கே வைக்கப்பட்டுள்ளது தெரியுமா?- கதறி அழும் தொண்டர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் கடந்த மாதம் முழுவதும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை செய்து விட்டு சமீபத்தில் தான் ஓய்வெடுக்க வீடு திரும்பினார். ஆனால்,  கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று முன் தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு மூச்சுத் திறணல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஓய்வில் இருந்த மனுஷனுக்கு என்ன இப்படி கொரோனா பாதிப்பு வந்து மீண்டும் குடைச்சல் கொடுக்குதே என ரசிகர்கள் வேதனையுடன் பதிவுகளை போட்டு வந்தனர்.விஜயகாந்தின் உடல்நலனில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.


இதனை அடுத்து தற்பொழுது இவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது அவரது உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறப்படுகின்றது. மேலும் இவரது பிரிவினைத் தாங்க முடியாமல் தொண்டர்கள் கதறி அழுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement