தென்னிந்திய திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். சமீபத்தில் அவருடைய இயக்கத்தில் வெளிவந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிறப்பான வசூல் சாதனை மட்டுமின்றி, விமர்சன ரீதியிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பீடுகளைப் பெற்றது.
இந்த வெற்றியின் பின்னணியில் தற்போது இயக்குநர் ஆதிக், சமீபத்திய ஓர் நேர்காணலில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, தலைவர் அஜித் குமாருடன் அவர் நடத்திய உரையாடல் இந்த நேர்காணலில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.
நேர்காணல் ஒன்றில் கதைத்த இயக்குநர் ஆதிக், 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு அஜித் குமாரிடம் நேரில் கதைத்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார். அதன்போது ஆதிக் கூறியதாவது, "அஜித் சார் தன்னிடம் படம் வெற்றி பெற்றிருந்தாலும் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வெற்றி பற்றிய எண்ணத்தை உடனே விட்டு விடுங்கள். அடுத்த வேலை என்னவென்று பாருங்கள் என்றதுடன் தொடர்ந்து கடினமாக உழைத்து மேலே போங்கள்." என்றார்.
அஜித் குமார் தனது வாழ்க்கைப் பயணத்தில் எப்போதும் ஒரு தனித்துவமான சமநிலையை கடைபிடிக்கின்றார். அந்த அனுபவத்தினை மனதில் வைத்து தொடர்ந்து புதிய முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே இயக்குநர் ஆதிக்கு அஜித் கூறிய முக்கியமான பாடமாகும்.
ஆதிக் இதை பகிரும் போது, தனக்கு அந்த வார்த்தைகள் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்டதாகவும் கூறினார். "அஜித் சாரின் அந்த வார்த்தைகள் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதற்குப் பிறகு என் அடுத்த வேலைகளில் முழு நேரத்தையும் செலுத்த ஆரம்பித்தேன்" என்றும் அவர் கூறினார்.
Listen News!