• Dec 25 2024

தமிழ் நடிகைகளுக்கு பஞ்சமா? கூலி படத்தில் இணையும் கன்னட நடிகை! யார் தெரியுமா?

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கூலி' இந்த திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது.


தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விஜயவாடா விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெற்று வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் சிறப்பு வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்திருந்தார். அதேப்போன்று இந்த படத்தில் கன்னட சினிமாவின் மற்றொரு பிரபல நடிகரான உபேந்தரா இணைந்துள்ளார். இவரை தொடர்ந்து தற்போது கன்னட நடிகை ரச்சிதா ராம் என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

Advertisement

Advertisement