• Apr 18 2026

பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப் பெட்டியுடன் வெளியேறியது யார் தெரியுமா?- எத்தனை லட்சத்துடன் போனார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரிாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சி, இந்த முறை பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

அதுமட்டுமின்றி இந்த சீசனில் ஒரே நாளில் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்டதும் புது முயற்சியாக இருந்தது. இப்படி பல்வேறு டுவிஸ்ட்டுகளுக்கு மத்தியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது .


கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் ரவீனா மற்றும் நிக்சன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்கள்.இஇந்த வாரம் பணப் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.ரூ. 9 லட்சம், ரூ. 13 லட்சம் இப்போது ரூ. 15 லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த பணப்பெட்டியை விஜய் வர்மா, தினேஷ், மணி, பூர்ணிமா இவர்களில் யாராவது ஒருவர் தான் பணப்பெட்டியுடன் வெளியேறுவார் என ரசிகர்கள் அவர்களுக்கு தோன்றிய போட்டியாளரை போட்டு கமெண்ட் செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில்  நேற்று இரவு 10.45 மணிக்கு விசித்ரா ரூ. 13 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகின்றது.


Advertisement

Advertisement