ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைத்திருந்தார். இந்த படம் எதிர்பார்ப்பையும் மீறி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது.
இதை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதன் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகாத நிலையில் ஜெயிலர் 2 படத்தின் கதை விவகாரத்தில் நெல்சன் தீவிரமாக இருப்பதாக கூறப்பட்டது.
சில தினங்களுக்கு முன்பு பொங்கல் தினத்தில் ஸ்பெஷலாக ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோவின் மூலம் வெளியானது. வழக்கமாக நெல்சன் ஸ்டைலில் வெளியான ப்ரோமோ இணையத்தில் வைரலானது. அத்துடன் அந்தப் ப்ரோமோ சர்ச்சைகளுக்கும் உள்ளானது. அதில் நிறைய
ஷாட்களில் ரஜினிக்கு டூப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது .மேலும் கிளாஸ் ஆப்ஸ் தவிர மற்ற ஷாட்களுக்கு ரஜினி டூப் போடப்பட்டதாகவே தெரிவித்தனர். இதனால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பட குழுவினர் அதற்கான மேக்கிங் வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். அதன் பின்பே அதில் ரஜினிகாந்த் தான் உண்மையாக நடித்தார் என்று பலரும் நம்பினார்கள்.
இந்த நிலையில், ஜெயிலர்2 படத்தின் ப்ரோமோவின் கிளோஸ் ஆப் காட்சிகளை விட மற்ற காட்சிகளில் டூப் தான் பயன்படுத்தப்பட்டது என மீண்டும் உறுதியாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். தற்பொழுது அவருடைய பேட்டி வைரல் ஆகி வருகின்றது.
அதன்படி ரஜினிகாந்த் வாங்கும் சம்பளத்திற்கு, அவருக்கு இருக்கும் மதிப்பிற்கு, அவருக்குள்ள கூட்டத்திற்கு அவர் இப்படி ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக நாங்கள் அவரை கேலி பண்ணவில்லை. அதில் காட்டப்பட்டது டூப் என சொன்னது மட்டும் தான்.
அதன்படி குளோசப் காட்சிகளில் ரஜினியை பயன்படுத்திவிட்டு ஏனைய காட்சிகளில் டூப் வைத்துள்ளார்கள். இப்பவும் அதை நான் உறுதியாக சொல்கின்றேன் அது ரஜினி கிடையாது என தெரிவித்து உள்ளார்.
Listen News!