• Dec 26 2024

பிரபல நடிகை சோபிதா திடீர் மரணம்.. திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் முன்னணி சீரியல் நடிகை ஆக நடித்து வந்தவர் தான் நடிகை சோபிதா சிவான்னா.  இவர் கன்னடத்தில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து பிரபலமாக காணப்பட்டுள்ளார்.

நடிகை சோபிதா சிவான்னா சீரியலில் மட்டும் இல்லாமல் ஜாக்பாட், அபார்ட்மெண்ட் டூ மர்டர், வந்தனா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அடுத்தடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். 

d_i_a

இதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்ட இவர், தனது கணவருடன் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை அவர் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.


இந்த நிலையில் நடிகை சோபிதா சிவான்னா திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. சோபிதாவின் பெற்றோர், உறவினர்கள் கர்நாடகாவில் வசித்து வந்த நிலையில் தகவல் அறிந்து அவர்கள் உடனடியாக ஹைதராபாத்துக்கு விரைந்துள்ளார்கள்.

நடிகை சோபிதாவின் திடீர் மரணத்திற்கு காரணம் தெரியாத நிலையில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது அவரது மரணத்திற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement