இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியத்தில் நடிகர் சூர்யா நடித்த "ரெட்ரோ" திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததுள்ளது. ஆனால், இப்படத்தின் சில காட்சிகள் நடிகர் சூர்யாவுக்கு திருப்தி அளிக்கவில்லை என்பதால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
"ரெட்ரோ" படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது என்ற தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருந்தது. ஆனால், இப்பொழுது சில முக்கியக் காட்சிகள் நடிகர் சூர்யாவின் மனதிற்கு தகுந்ததாக இல்லை என அவர் வெளிப்படையாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சில காட்சிகள் திரைக்கதையின் சாராம்சத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக அவர் கருதியதனாலேயே சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை உருவாகியதாக படக்குழு கூறுகின்றது.
சூர்யா இப்படத்தின் சில காட்சிகள் குறித்து விமர்சனம் செய்ததும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மிகுந்த மனவருத்தம் அடைந்தார் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். திரைப்படத்தின் ஒவ்வொரு சீனையும் கவனமாக எடுத்த இயக்குநருக்கு இவ்வாறு சூர்யா கூறியிருப்பது எதிர்பாராத ஒன்று என கூறியுள்ளார்.
Listen News!