• Jun 10 2026

என்றும் மாறாத இளமை.. சினேகாவின் லேட்டஸ்ட் லுக்கைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பாலும் இனிமையான புன்னகையாலும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் சினேகா. “புன்னகை அரசி” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.


 குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சினேகா வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் அவர் அழகான புடவை அணிந்து, எளிமையான அதே நேரத்தில் எலிகண்டான லுக்கில் காட்சியளிக்கிறார். குறிப்பாக, மாலை கட்டும் காட்சிகள் புகைப்படங்களில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்துள்ளது.

சினேகாவின் இந்த பாரம்பரிய லுக், அவரின் இயல்பான அழகை மேலும் மெருகூட்டியுள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும் “எப்போதும் போல அழகு குறையவில்லை” என்று பாராட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement