கன்னட சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி, பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. குறுகிய காலத்திலேயே இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறிய அவர், தனது நடிப்பு திறமைக்கும், கவர்ச்சியான திரைபட தோற்றத்திற்கும் ரசிகர்களிடையே தனி இடத்தைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருந்து, கடந்த பிப்ரவரி மாதம் உதய்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணத்தில் இருவரும் இணைந்தனர் என்ற தகவல் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக அமைந்தது. இந்த ஜோடி ரசிகர்களின் பிரியமான ஜோடிகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இன்று ஏப்ரல் 5ஆம் தேதி, ராஷ்மிகா மந்தனா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திருமணத்திற்கு பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், இந்த நாள் அவருக்கு மிகவும் சிறப்பானதாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல மொழிகளில் பிஸியாக இருக்கும் ராஷ்மிகா, எதிர்காலத்திலும் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துகின்றனர். அத்துடன், அவரது சினிமா பயணம் இன்னும் உயரங்களைத் தொடும் என்பதில் சந்தேகமே இல்லை.
Listen News!