தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தனது நடிப்புத்திறமையால் அதிகளவு ரசிகர்களை கவர்ந்து கொண்டார். தற்பொழுது அவரின் புதிய முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் வந்த தகவலின் படி, விஜய் சேதுபதி குருகுல முறையில் சிலம்பம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி எப்போதும் புதுமையை விரும்பும் நடிகர். தனது திரைப்பயணத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்பதுடன் தன்னை ஒவ்வொரு முறையும் புதிய கோணத்தில் காட்டும் முயற்சியில் ஈடுபடுபவர். அத்தகைய விஜய் சேதுபதி இப்போது குருகுல முறையில் சிலம்பம் பயிற்சி பெறுவதாகவும் அதில் அவர் மிகுந்த ஒழுக்கத்துடன் அந்தக் கலையை ஆழமாகக் கற்றுக்கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதி பாரம்பரிய முறையில் இந்தப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் என்பது அவரது முயற்சியின் முக்கிய அம்சமாக அனைவரும் பார்க்கின்றார்கள். அத்துடன் விஜய் சேதுபதி தற்போது பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். அவர் நடிக்கவிருக்கும் ஒரு மாஸான ஆக்ஷன் திரைப்படத்திற்காகவே சிலம்பம் பயிற்சி எடுத்துக் கொள்வதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் சேதுபதியின் இந்த முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்புத்திறன் மற்றும் வாழ்க்கை முறையில் புதுமைகளை கற்றுக்கொள்ளும் விதம் என்பன அனைவரையும் வியக்கச் செய்துள்ளது.
Listen News!