• Apr 25 2026

விஜய்யின் ஒரு கையின் விரல் துண்டாகிவிட்டதா? அதிர்ச்சி புகைப்படம்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின் ஒரு கையின் விரல் துண்டாகி விட்டதாக புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நடிகர் விஜய் தற்போது ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் கசிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தற்போது ஒரு விரல் இல்லாத கையின் புகைப்படம் ஒன்று கசிந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கை விஜய்யின் ‘கோட்’ படத்தின் கேரக்டரின் கை தான் என்றும் விஜய் ஒரு போரில் ஈடுபட்ட போது அவரது கை விரல் துண்டாகி இருப்பதாகவும் அதன் பின்னர் மருத்துவ சிகிச்சை மூலம் செயற்கை எலும்பு வைக்கப்பட்டு ஒரு விரல் உருவாக்கப்படுவது போல் கதை அம்சம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இந்த புகைப்படம் எப்படி இணையதளங்களில் வெளியானது என்று தெரியாத நிலையில் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு விரல் துண்டானது கதையின் முக்கிய பகுதி என்பதால் அது எப்படி இணையத்தில் கசிந்தது என்று அதிர்ச்சியில்  வெங்கட் பிரபு உள்ளதாகவும் தெரிகிறது.

மொத்தத்தில் இந்த படத்தின் விஜய்க்கு ஒரு கையில் விரல் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement