• Dec 26 2024

மயங்கிய அமிர்தாவை எழிலிடமிருந்து வாங்கிய கணேஷ், பாக்கியாவை மோசமாகத் திட்டிய ஈஸ்வரி- கோபி எடுத்த முடிவு- Baakiyalakshmi Serial

stella / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அமிர்தா கோயிலுக்குள்ளே செல்லும் போது கணேஷ் வந்து அமிர்தாவைக் கூப்பிடுகின்றார்.கணேஷைப் பார்த்த அமிர்தா அதிர்ச்சியடைந்து எழிலிடம் சொல்ல வருகின்றார். அப்போது திடீரென மயங்கி விழ எழில் அமிர்தாவை தட்டி எழுப்புகின்றார். இதைப் பார்த்த கணேஷ் எழிலின் கையை எடுத்து விட்டு தான் அமிர்தாவைத் தட்டி எழுப்புகின்றார்.


கணேஷ் வந்திருப்பதைப் பார்த்த எழில் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்பதோடு,கணேஷ் எப்படி வந்தார் என யோசிக்கின்றார். தொடர்ந்து அமிர்தாவை எழுப்ப கணேஷ் தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து அமிர்தாவின் முகத்தில் தெழிக்கின்றார். அந்த நேரம் கணேஷின் பெற்றோரும் கோயிலுக்கு வந்து விடுகின்றனர்.

மயக்கத்திலிருந்து எழும்பிய அமிர்தா கணேஷைப் பார்த்து பயப்பட, கணேஷ் நிலாபாப்பாவையும் அமிர்தாவையும் தன்னுடன் வரச் சொல்லுமாறு கெஞ்சுகின்றார். அத்தோடு அமிர்தாவின் அருகில் சென்று தொட்டுப் பேச வர அமிர்தா பயத்தில் ஓடிப் போய் எழில் பக்கம் நிற்கின்றார்.அப்போது கணேஷின் பெற்றோர் நடந்ததை அமிர்தாவிடம் கூறுகின்றனர்.


மறுபுறம் பாக்கியா எழில் விஷயம் பற்றி சொன்னதால் எல்லோரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஈஸ்வரி பாக்கியா உன்னால தானே இந்த கல்யாணம் நடந்திச்சு இது எல்லாத்திற்கும் நீ தான் காரணம். எழில் வாழ்க்கையையே நாசமாக்கிட்ட என்று திட்டுகின்றார். அப்போது ராமமூர்த்தி நடந்து முடிஞ்சதைப் பேசி இனி என்ன பலன் நடக்க வேண்டியதைப் பார்ப்போம் என சொல்கின்றார்.


இதனால் எல்லோரும் சேர்ந்து அமிர்தாவுக்கும் எழிலுக்கும் தெரியாமல் இந்த விஷயத்தை எப்படியாவது முடிக்கனும். கணேஷிற்கு புரிய வைக்கனும் என்றும் முடிவு பண்ணுகின்றனர். இதனை அடுத்து கோயிலில் கணேஷ் அமிர்தாவை தன்னுடன் வரச் சொல்லி  நச்சரிப்பதால் அவருடைய பெற்றோர்கள் ஆறுதலாக பேசி அமிர்தாவுக்கு புரிய வைக்கலாம் வா என்று அழைத்துக் கொண்டு போகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement