• Apr 24 2025

விஜய் ரசிகர்களின் அன்பால் நெகிழ்ச்சியடைந்த ஜெனிலியா..! இன்ஸ்டாவில் வைரலான வீடியோ..!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் காதல் மற்றும் சென்டிமெண்ட் கலந்த படங்களுக்கு எப்பொழுதும் மக்கள் மத்தியில் மரியாதை உண்டு. அந்தவகையில் 2005 ஆம் ஆண்டு வெளியான "சச்சின்" திரைப்படமும் இத்தகைய காதல் கலந்த அம்சங்களுடன் வெளியாகியிருந்தது. இப்பொழுது அத்திரைப்படத்தினை திரையரங்குகளில் ரீ- ரீலீஸ் செய்து ரசிகர்களை நெகிழவைத்துள்ளனர்.

இளைய தளபதி விஜய், ஜெனிலியா மற்றும் விவேக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த இந்த திரைப்படம், காதல், கலாட்டா மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையுடன் இணைந்து சூப்பர் ஹிட் பட்டியலில் இடம்பிடித்திருந்தது.


இந்தப் படம் தற்போது 20வது ஆண்டைக் கடந்து மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆனதும், ரசிகர்கள் அதனை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அண்மையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் "சச்சின்" படம் 4K ரீமாஸ்டர் செய்யப்பட்டு தியட்டரில் வெளியாகியிருந்தது.

இதனைப் பார்த்த நடிகை ஜெனிலியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ரசிகர்கள் விஜய்க்காக எற்படுத்திய ஹவுஸ் புல் கொண்டாட்டங்களைப் பார்த்த அவர், மிகுந்த நெகிழ்ச்சியுடன் சில கருத்துக்களையும் கூறியுள்ளார். அதன்போது அவர் கூறியதாவது,  “நான் அதை பார்த்ததும் என் மனசு முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு கம்பீரமா ரீ-ரீலீஸ் ஆகுவது என்பது ஒரு அற்புதம்.” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement