• Jan 08 2025

எங்கடா பாதி மண்டைய காணோம்.?? பிக்பாஸ் எலிமினேஷனுக்கு பிறகு கெட்டப்பை மாற்றிய ஜெஃப்ரி

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8ன் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சத்யா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து  ஆறு பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன் மற்றும் சிவகுமார் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்கள். தற்போது இதன் இறுதியில் மொத்தமாக எட்டு போட்டியாளர்கள் தான் எஞ்சியுள்ளார்கள்.

d_i_a

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி வந்த நிலையில், கடைசி மூன்று வாரங்களாக டபுள் எவிக்சன் நடைபெற்று வருகிறது. 


தற்போது பிக்பாஸ் வீட்டில் எட்டு போட்டியாளர்கள் தான் மிஞ்சி  உள்ளனர். இதில் பைனலுக்குள் நுழைய உள்ள ஐந்து போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சமீபத்தில் எலிமினிட் ஆகி வெளியே சென்ற ஜெஃப்ரி வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 

அதில் அவர் தனது முடியை சரி செய்வதற்காக சலூன் சென்றுள்ளார். இதன் போது அவர் ஸ்டைலாக வெட்டிய புது ஹேர் கட்டை ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்து வருகின்றார்கள்.


ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சத்யா, அன்ஷிதா, ஜெஃப்ரி ஆகியோர் நீச்சல் தடாகத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இருந்தது. இப்போது ஜெஃப்ரியின் புது ஹேர் ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் பலரும் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.

Advertisement

Advertisement