• Apr 26 2026

தனுஷ், சூர்யாவை அடுத்து பாலிவுட் செல்லும் ஜிவி பிரகாஷ்.. நயன்தாரா வில்லன் தான் இயக்குனர்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர்  தனுஷ் ஏற்கனவே சில இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் சூர்யா தற்போது ’கர்ணா’ என்ற இந்தி படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் தனுஷ், சூர்யாவை அடுத்து தற்போது ஜிவி பிரகாஷ் பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலக இயக்குனர்களான அட்லி, விஷ்ணுவர்தன், ஏஆர் முருகதாஸ் உட்பட ஒரு சிலர் பாலிவுட்டில் திரைப்படங்கள் இயக்கி வரும் நிலையில் பாலிவுட் இயக்குனர்கள் சிலர் தமிழ் நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளனர்.



அந்த வகையில் ஜிவி பிரகாஷ் அடுத்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் என்பவர் இயக்க உள்ளார். இவர் நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் ’லியோ’ படத்தில் கூட ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனுராக் காஷ்யப் இயக்கிய  பாலிவுட் படம் ஒன்றில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் இசை அமைத்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், ஹிந்தி உள்பட பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்ற இரட்டைக் குதிரைகளில் சவாரி செய்து வரும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக பாலிவுட் திரையுலகில் களமிறங்கவுள்ள நிலையில் அங்கும் அவர் வெற்றி படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement