• Apr 26 2026

‘கோட்’ படத்தில் நடிப்பதை இன்ஸ்டாவில் உறுதி செய்த த்ரிஷா.. அட.. தயாரிப்பாளரும் நடிக்கிறாரா?

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சென்னையில் படமாக்கப்பட்டு வருவதாகவும் இந்த பாடல் காட்சியில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் வெளியான தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

கோட்படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தாலும் படக்குழுவினர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சற்றுமுன் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சென்னையில் த்ரிஷா படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அவர் த்ரிஷா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆவது நடன உறுதி செய்யப்பட்டுள்ளது.


அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்த புகைப்படத்தில் த்ரிஷா படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்களும் இருப்பதை அடுத்து அவரும் இந்த பாடலில் தோன்றுகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும் அர்ச்சனா கல்பாத்தி இந்த படத்தில் தோன்றினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தான் கூறப்பட்டு வருகிறது.
 
ஏனெனில் விஜய்யின் தீவிர ரசிகை அர்ச்சனா என்பதும் அவர் கல்லூரியில் படிக்கும்போது விஜய் நடித்த படம் ரிலீஸ் ஆனால் தொடர்ச்சியாக ஒரே தியேட்டரில் நான்கு ஷோக்கள் பார்த்ததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் த்ரிஷாகோட்படத்தில் நடனம் ஆடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரல் ஆகி வருகின்றனர்.

Advertisement

Advertisement