தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது தமிழக வெற்றி கழக கட்சியின் தலைவரான செயற்பட்டு வருகின்றார். இவர் தனது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கின்றார். மேலும் இவர் தனது எக்ஸ் தளபக்கத்தில் இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
தற்போது " ஜனநாயகன்" திரைப்படத்தின் படப்பிப்புகள் நிறைவு பெற்றுள்ளதை தொடர்ந்து மக்கள் கட்சி சார்ந்த விடயங்களில் முழுகவனத்தை செலுத்த உள்ளதாக பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். மேலும் சினிமாத்துறையின் இறுதி திரைப்படமான "ஜனநாயகன்" ரசிகர்கள் மத்தியில் நீண்ட எதிர் பார்ப்பில் உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து இந்த திரைப்படம் விஜயின் அரசியல் பயணத்திற்கு துணையாக இருக்கும் என்று எதிர் பார்க்கபடுகின்றது.
மேலும் தற்போது தனது எக்ஸ் தளபக்கத்தில் "உன்னத தியாகத்தை போற்றும் வகையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்ததுடன், உயரிய தியகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதத்துவம் ,சமத்துவம், சமய நல்லிணக்கம் ,புராண மகிழ்ச்சி கிடைக்க உறுதி எடுப்போம்" எனக் கூறி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதனைப்பார்த்த ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர் .
— TVK Vijay (@TVKVijayHQ) June 7, 2025
Listen News!