தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா பல மாணவர்களின் கல்விக்கு நிதி உதவி செய்து வருகின்றார். இதற்கென தனியாக ஒரு அகரம் அறக்கட்டளை நிறுவனத்தை நடாத்தி வருகின்றார். இதன் மூலம் படித்து இன்று வாழ்க்கையில் நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களுக்காக இவர் ஒரு பிரமாண்டமான நிகழ்வு ஒன்றினை ஒழுங்கமைத்துள்ளார்.
இந்த நிகழ்வினை ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஒழுங்குபடுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைவிட அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டுவிழாவையும் இந்த நேரத்தில் கொண்டாட தீர்மானித்துள்ளார். மேலும் இந்த நிகழ்வினை விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து
மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக கமல் மற்றும் அமீர்கானை அழைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு சாய்ராம் பொருளியல் கல்லூரியில் ஒழுங்குபடுத்தி இருப்பதாக சூர்யா தரப்பு வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.
Listen News!