• Aug 20 2025

2026 சட்டமன்றத் தேர்தலில் சூர்யா அறிமுகமா?நற்பணி இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Roshika / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தனது தரமான நடிப்பு, கதைத்தேர்வு மற்றும் சமூக பணிகள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் மட்டுமின்றி, சமூகத்திற்காக அவர் மேற்கொள்கின்ற சேவைகளும் பெரிதும் பாராட்டப்படும் நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


சமூக வலைத்தளங்களில் "வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா போட்டியிட உள்ளார்" என்ற செய்தி வேகமாக வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.


இந்த தகவலுக்கு பதிலளிக்க, சூர்யா நடத்தும் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கம் நேற்று ஒரு விளக்கம் வெளியிட்டது. அதில், “சட்டமன்ற தேர்தலில் சூர்யா போட்டியிடுவார் என்ற தகவல் பொய்யானது. இது நம்பகமற்ற மற்றும் பரப்பப்படும் தவறான வதந்தி. தற்போது அவர் எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை என்றும், அரசியல் களத்தில் ஈடுபடுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை” என தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement