ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்யாததற்காக, நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கம் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரபல பட தயாரிப்பு நிறுவனம் மனுத் தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக, நடிகர் ரவி மோகன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கிடையே ஏற்பட்ட ஒப்பந்த வேறுபாடுகள் காரணமாக, இரு தரப்பும் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர். இந்த வழக்கில், நடிகர் ரவி மோகன் ரூ.5.90 கோடி அளவுக்கான நட்டஈடு தொகைக்கு உத்தரவாதம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை தொடர்ச்சியாக பின்பற்றாமல் இருந்ததால், தற்போது தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், “நீதி நிலைத்திருக்க வேண்டுமானால், குறித்த உத்தரவாத தொகையை செலுத்தாத ரவி மோகனின் சொத்துகளை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடக்கம் செய்ய வேண்டும்” என கோரப்பட்டுள்ளது.
Listen News!