தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'கைதி 2' திரைப்படம் 2026-ல் படமாகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கூலி’ படம் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருகிற நிலையில், இயக்குநர் லோகேஷ் தனது அடுத்த படமாக கைதியின் இரண்டாம் பாகத்துக்குத் தயாராகி வருகிறார்.
படம் தொடர்பான முக்கிய தகவல்களும், சம்பள விவரங்களும் தற்போது திரையுலக வட்டாரங்களில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
தற்பொழுது வெளியான தகவல்களின் படி, ‘கைதி 2’ திரைப்படம் 190 கோடி எனும் பிரம்மாண்டமான பட்ஜெட்டுடன் உருவாக உள்ளது. இது, ஒரு ஆக்ஷன் மற்றும் திரில்லர் படமாக இருக்கும் என கருதப்படுகிறது.
‘கூலி’ பட வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழ்த் திரையுலகின் சாதனை படைத்த இயக்குநராக காணப்படுவதால், இவர் தற்போது ஒரு படத்திற்கு 75 கோடி ரூபா சம்பளம் வாங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அத்துடன் கார்த்தி இப்படத்தில் 25 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!