• Aug 20 2025

"Thug Life" தோல்வி கமலை பாதித்ததா..? ஸ்ருதி ஹாசன் ஓபன்டாக்.!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரான கமல் ஹாசன் அவர்கள் சமீபத்தில் வெளியான "Thug Life" படத்தின் விமர்சனங்களால் ஒரு பரபரப்பான நிலையை சந்தித்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், சிலர் இந்தப் படத்தை “வெற்றி பெறாத படைப்பு” என விமர்சித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் குறைந்த வருவாய் பெற்றது எனவும் விமர்சித்தனர். 


இந்நிலையில், அவரது மகளும், பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாசன், சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் தந்தையின் மனநிலை, ரசிகர்கள் நினைப்பது போல அல்ல என தெளிவாக கூறியுள்ளார்.


ஸ்ருதி ஹாசன் பேட்டியில், “தக் லைஃப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை என்று மக்கள் பேசுகிறார்கள். ஆனால், இதெல்லாம் என் அப்பாவை சுத்தமா பாதிக்கவே இல்ல. அவர் எப்போதும் தனது எல்லா பணத்தையும் சினிமாவில் தான் திரும்பி போடுவார். பணத்தைக் கொண்டு 2வது வீடு ,3வது கார் என அவர் வாங்க விரும்புவதில்லை.

எல்லாமே சினிமாவுக்குள் தான் போகிறது. மக்கள் நினைப்பதைப் போல இந்த நம்பர் கேம் அவரைப் பாதித்தது இல்லை." என்று கூறியுள்ளார். இந்தக் கருத்துகள் தற்பொழுது சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது.                          


Advertisement

Advertisement