• Dec 26 2024

தங்கையின் நிச்சயதார்த்தத்தில் ஆட்டம் போட்ட அக்கா... நடிகை சாய் பல்லவி ஆடிய வைரல் வீடியோ இதோ...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

சாய் பல்லவி, ஒரு கலைஞராக விஜய் டிவியில் முதலில் மக்களுக்கு அறிமுகம் ஆனார், ஆனால் இந்த நிகழ்ச்சி அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை. அதன்பிறகு கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார்.


தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்.கே 21வது படத்தில் நடித்து வருகிறார், படத்தின் Glimpse பார்க்க ரசிகர்களும் மிக ஆவலாக உள்ளனர். சாய் பல்லவியின் தங்கை தமிழில் சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.


இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார், தனது காதலன் வினீத் என்பவரையும் ரசிகர்களுக்காக  அறிமுகப்படுத்தினார்.


இந்த நிலையில் இவர்களது நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது, இந்த விழாவில் நடிகை சாய் பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடி என்ஜோய் பண்ணிய  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ...  


Advertisement

Advertisement