• Apr 07 2026

சல்மான் கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா.. வெளியான அதகள அப்டேட் இதோ.!

shali / 1 week ago

Advertisement

Listen News!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் நாயகியாக நயன்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழும் நயன்தாரா, தற்போது பாலிவுட்டிலும் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறார். ஏற்கனவே ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமான அவர், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

இந்நிலையில், தற்போது சல்மான் கானுடன் இணையும் இந்த புதிய படம், அவரின் பாலிவுட் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் ஒரே படத்தில் இணைவதால், இந்தத் திட்டம் மீது மிகுந்த கவனம் திரும்பியுள்ளது.

மேலும், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகும் இந்த படம் ஒரு பெரிய பட்ஜெட் எனவும், பான்-இந்தியா அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், நயன்தாரா ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement