• Dec 27 2024

இன்ஸ்டாவில் PT sir ன் Rahul உடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ள ஹிப் ஹாப் ஆதி.

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

சுயாதீன சொல்இசைக் கலைஞனாக அறியப்பட்டு  தமிழ் தாண்டி இந்திய மற்றும் உலக அளவில் பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி.தொடர்ந்து 2015 இல் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான ஆம்பள திரைப்படத்தின் ஊடாக இசையமைப்பாளராக  தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.


தொடர்ந்து தன் வாழ்க்கை பயணத்தினை மையமாக கொண்டு மீசய முறுக்கு எனும் திரைப்படத்தை இயக்கி தானே ஹீரோவாக களமிறங்கியிருந்தார்.ரசிகர்கள் மத்தியில் பெரு வரவேற்பை பெற்ற இப் படத்தினை தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.


அண்மையில் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி நடித்து வெளியாகியிருக்கும் PT sir திரைப்படமானது கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.இந்நிலையில் PT sir படத்தின் Rahul எனும் கதாபாத்திரத்தில் நடித்த சிறுவனான Trishiv வை படப்பிடிப்பு முடித்து வீட்டுக்கு வழியனுப்பி வைக்கும் காணொளியொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி.


Advertisement

Advertisement