• Apr 18 2026

ஒருவர் மீது ஒருவர் ஏறி படுத்து அட்டகாசம் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்- வைரலாகும் வீடியோ- பிக்பாஸ் வீட்டுக்குள் என்னப்பா நடக்குது....

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஷோவானது தற்பொழுது பல விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இதில் எந்திரன், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த மாயாவும் போட்டியாளராக பங்குபற்றி வருகின்றார்.

கமல்ஹாசனின் பெரிய சப்போர்ட் மாயாவுக்கு இருப்பதால் தான் அவருக்கு எதிராக கமல் ஒரு வார்த்தை கூட கடுமையாக கண்டித்து பேசாமல் ஜோவிகாவையும் பூர்ணிமாவையும் தான் விளாசி எடுத்தார் என்றும் மாயாவை அப்படியே கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுகிறார் என்றும் இந்த சீசனின் டைட்டில் வின்னரே மாயா தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


இது ஒருபுறம் இருக்க பாடகியான சுசித்ரா மாயா ஒரு லெஸ்பியன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா மீது பூர்ணிமா மேலே ஏறி படுத்துக் கொண்டு அட்டகாசம் செய்யும் வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இருவரும் ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்து கிசுகிசு பேச ஆரம்பித்ததில் இருந்து இருவரும் நெருக்கமாகவே உள்ளனர்.அதனால், தான் பிக் பாஸ் வீட்டில் மாயாவும் பூர்ணிமாவும் எப்போதுமே ஒன்றாக உள்ளனர் என்றும் பெட்ஷீட் போர்த்திக் கொண்டு மைக்கை கழட்டி வைத்து விட்டு இருவரும் பேசும் காட்சிகளையும் ரசிகர்கள் ஷேர் செய்து என்னடா நடக்குது பிக் பாஸ் வீட்டுக்குள்ள என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement