• Dec 27 2024

நானும் விஜய் கட்சில சேந்துட்டன், பாருங்க மக்களே.! தவெக கட்சில் சேர்ந்ததை வெளியிட்ட சினிமா நடிகர்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில்  அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து கட்சிக்காக பல தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலில் ஒன்றை அறிமுகம் செய்து வைத்தார். 

இதை அடுத்து ஒரு சில மணி நிமிடங்களிலேயே குறித்த செயலியில் பல்லாயிரக்கணக்கான ரெக்குவஸ்ட் குவிந்த நிலையில், அந்த செயலி முடக்கப்பட்டது.


இதை தொடர்ந்து தற்போது 50 லட்சத்துக்கு அதிகமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக சேர்ந்துள்ளார்கள்.

இந்த நிலையில், நடிகர் ஒருவர் உறுப்பினராக சேர்ந்தது பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.


அதாவது, மொபைல் ஆப் இன் ஊடாக விஜயின் கட்சியில சேரலாம் என்ற சந்தர்ப்பத்தில் 90ஸ் , 80ஸ் களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பிரபல நடிகர் நாசர் அவர்களின் மகன் நூருல், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததோடு, அதற்கு ஆதாரமாக காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தற்போது குறித்த சம்பவம் வைரலாகி உள்ளது.

Advertisement

Advertisement