• Dec 27 2024

அம்மாவான பிறகு தான் நேசிக்க கத்துக்கிட்டேன்..!! பிரபல நடிகை நெகிழ்ச்சி பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

2000 ஆண்டு கால பகுதிகளில் பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர்தான் நடிகை ஸ்ரேயா. இவர் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதற்குப் பிறகு எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்தில் ஏராளமான இளைஞர்களின் மனதை கொள்ளையடித்த ஸ்ரேயாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அதன்படி முன்னணி நடிகர்கள் ஆன ரஜினி, விஜய், தனுஷ், ஜெயம் ரவி அனைவரும் ஜோடி போட்டு ஹீரோயினாக வலம் வந்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் ஸ்டார் நடிகையாக ஜொலித்த இவர், செம பீக்கில் இருந்தபோதே காதல் திருமணம் செய்து கொண்டு குடும்பவாழ்க்கைக்குள் ஐக்கியமானார்.

சினிமா துறையில் இருந்து விலகி இருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஸ்ரேயா. மேலும் தற்போது ஹிந்தி படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றாராம்.


இந்த நிலையில்,  நடிகை ஸ்ரேயா பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பர்சனலா இன்னைக்கு இருக்கிற நிலைமைக்கு காரணம் எனது கணவர் ஆண்ட்ரி தான். எனக்கு நிறைய செல்ப்  டவுட்ஸ் இருந்துச்சு. காலையில எழுந்ததும் இன்னைக்கு என்ன பண்ண போறேன் என்  லுக் ஓகேவா என்றெல்லாம் சந்தேகம் வரும். அதை எல்லாம் மாத்தியவர் அவர் தான். நான் எப்போ டென்ஷனா  இருந்தாலும் உடனே என்னை மாத்திடுவார். அவர் கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் என் லைஃப்ல பெஸ்ட் மொமண்டாகவே சொல்லலாம்.

என்னை முழுமையாக மாற்றியதற்கு என் கணவர் போலவே என் மகள் ராதாவுக்கும் பெரிய பங்கு உண்டு. அம்மாவான பிறகு தான் நான் என்னை நேசிக்க கத்துக்கிட்டேன். இவங்க ரெண்டு பேரும் என் வாழ்க்கையில் வந்ததை மிக ஆசீர்வாதமாக நினைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement