விஜயகுமாரின் மகளும் நடிகையுமாகிய வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது மிஸஸ் & மிஸ்டர் எனும் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் வனிதாவுக்கு ஜோடியாக ராபர்ட் மாஸ்டர் நடித்துள்ளதுடன் படத்தினை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்து வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் போஸ்ட்டர் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சி ஒன்று எடுக்கப்பட்டது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன அடுத்த கல்யாணமா என விமர்சித்து வந்தனர். இதற்கு சமீபத்தைய பேட்டி ஒன்றில் வனிதா பதிலடி கொடுத்துள்ளார்.
குறித்த பேட்டியில் அவர் "மிஸஸ் & மிஸ்டர் பட போஸ்டரை வைத்து ராபர்ட் மாஸ்டருக்கும் நடிகை வனிதாவுக்கும் திருமணம் என என பரவிய செய்திக்கு நடிகை வனிதா காட்டமாக பதிலளித்துள்ளார். “40 திருமணம் கூட செய்வேன் ஆனா 4 திருமணம் கூட செய்யவில்லை. என்னை அசிங்கப்படுத்த வேண்டாம். நான் திருமணம் செய்துகொள்வதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்னை” என பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பினார்.
Listen News!