தமிழ் சினிமாவில் நடிகர்களாக திகழ்ந்தவர்கள் தற்போது இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருந்தார். அதன் மூலம் அவரிடம் தற்போது பல படங்கள் காத்திருக்கின்றன.
ரவி மோகன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்கள் என்றால் கராத்தே பாபு மற்றும் ப்ரோ கோட் ஆகும். மேலும் இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் யோகி பாபுவை வைத்து படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.
இன்னொரு பக்கம் ரவி மோகனின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளால் சூழ்ந்து வருகிறது. இவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக இருக்கும் நிலையில், காதல் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக தெரிவித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
ரவி மோகன், தான் ஆர்த்தி வீட்டில் பல கொடுமைகளை சந்தித்ததாகவும், சுயமாக செயல்பட முடியவில்லை என்றும், பணம் செலவழிக்க முடியவில்லை என்றும் ஆர்த்தி குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை பலரும் நம்பி ஆர்த்தி மீது கோபப்பட்டனர்.

ஆனால் ஆர்த்தி, "இது எல்லாம் அவரது கட்டுக்கதை. வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பே எல்லாவற்றையும் தயாராக வைத்துவிட்டு வெளியேறினார். விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்" என்று எதிர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கிடையில் ரவி மோகன், விவாகரத்துக்கு முன்பே நெருங்கிய தோழி கெனிஷாவை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்றார். மேலும் அவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். ரவி மோகன் செல்லும் இடமெல்லாம் கெனிஷாவையும் அழைத்துச் சென்றது பல கிசுகிசுக்களுக்கு காரணமாக அமைந்தது.
இந்நிலையில் ரவி மோகனும் கெனிஷாவும் இணைந்து கோவாவில் 42 லட்சம் ரூபாய்க்கு புதியதாக ஒரு இடம் வாங்கியுள்ளனர். அந்த ஆவணங்களில் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்கும்போது ரவி மோகன் "தனக்கு திருமணம் ஆகவில்லை" என தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ரவி மோகன், விவாகரத்து செய்யாத நிலையிலேயே "தனக்கு திருமணம் ஆகவில்லை" என கூறி சொத்து பதிவு செய்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Listen News!