தமிழ் திரையுலகின் பெரும் இழப்பாக கருதப்படும் பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்டுள்ள உணர்ச்சிபூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவரது பதிவில், “தமிழின் குரல், ஒரிஜினல் இயக்குநர், லெஜண்ட், திறமைகளை பாராட்ட மறக்காத ஒருவர். உங்களுடன் பணியாற்றியதும், இசை குறித்து உங்களுடன் நீண்ட நேரம் உரையாடியதும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். தமிழ் சினிமாவின் உண்மையான ஆசான் நீங்கள். உங்கள் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்து வருகின்றனர். கிராமிய வாழ்க்கையையும் மனித உணர்வுகளையும் இயல்பாக திரையில் பதிவு செய்த அவரது படைப்புகள் தலைமுறைகளை தாண்டியும் பேசப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்த இந்த அஞ்சலி பதிவு, பாரதிராஜா மீது திரையுலகினர் கொண்டிருந்த மரியாதையையும் அன்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. அவரது மறைவு ரசிகர்கள் மட்டுமல்லாமல், முழு தமிழ் திரைப்பட உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது படைப்புகளும் நினைவுகளும் என்றும் நிலைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!