• Dec 26 2024

சர்வதேச விருதை வென்ற கேப்டன் மில்லர் திரைப்படம் ! மாஸ் காட்டிய தனுஷ் !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல விதமான காவியதிரைப்படங்கள் வெளியாகினாலும் அவை அனைத்துமே ரசிகர்களால் கொண்டாடப்படுவதில்லை. அவ்வாறே தமிழில் பெரிய வரவேற்பு இல்லாவிட்டாலும் சர்வதேச ரீதியில் சாதித்துள்ளது கேப்டன் மில்லர் திரைப்படம். 


கேப்டன் மில்லர் 2024 இல் பொங்கல் வெளியீடாக வெளிவந்த காவிய திரைப்படம் ஆகும். அருண் மாதேசுவரன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் உடன் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன், அதிதி பாலன், சுதீப் கிஷன், ஜான் கொக்கன் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.


இந்த நிலையிலேயே லண்டனில் நடைபெற்ற தேசிய திரைப்பட விழாவில் சிறந்த அயலக மொழிப்படத்துக்கான விருது நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்' படத்துக்கு வழங்கப்பட்டது. இதற்கு பல சினிமா பிரபலங்களும் , ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement